118. கண்விதுப்பழிதல்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்:கண்விதுப்பழிதல்.
1171. | கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. |
|
1172. | தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன். |
|
1173. | கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து. |
|
1174. | பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து. |
|
1175. | படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண். |
|
1176. | ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது. |
|
1177. | உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண். |
|
1178. | பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண். |
|
1179. | வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். |
|
1180. | மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 10:23 AM