களைபிடுங்குதல்

தன்னானே தானனன்னே | தானனன்னே தானனன்னே
தன்னான தானானனே தன்னானே
தன்னானே தானானனே தன்னானே.......

கண்ணாடி வளையல் போட்டு
களையெடுக்க வந்த புள்ளே //
கண்ணாடி மின்னலிலே //
களையெடுப்பு பிந்துதடி........ஓ............ஓ..............

வாய்க்கால் வரம்புச்சாமி
வயற்காட்டுப் பொன்னுச்சாமி //
களையெடுக்கும் பெண்களுக்கு //
காவலுக்கு வந்த சாமி......ஓ..................ஓ...........

சின்னச் சின்ன கட்டுக் கட்டி
சிங்காரக் கட்டுக் கட்டி //
தூக்கி விடும் கொத்தனாரே //
தூரக் களம் போய்ச்சேர ............ஓ.................ஓ.........

களையெடுத்துக் கிறுகிறுத்து
கண்ணிரண்டும் பஞ்சடைந்து //
சின்னக் கட்டு கட்டச் சொல்லி
சிந்துராளே கண்ணீரை.........ஓ...............ஓ..........

பாடியவர்-
திருமதி.சிவை குகணேசன் (விரிவுரையாளர் யா.தே.க.க)
சதுஸ்ரஜாதி ஏகதாளம் (திஸ்ர நடை)
Last modified: Wednesday, 16 November 2022, 9:29 AM