77. படைமாட்சி
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: படையில். அதிகாரம்: படைமாட்சி
761. | உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. |
|
762. | உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது. |
|
763. | ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். |
|
764. | அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை. |
|
765. | கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. |
|
766. | மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. |
|
767. | தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. |
|
768. | அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். |
|
769. | சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. |
|
770. | நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். |
|
Last modified: Wednesday, 16 February 2022, 3:33 AM