76. பொருள்செயல்வகை
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: கூழியல். அதிகாரம்: பொருள்செயல்வகை
751. | பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். |
|
752. | இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. |
|
753. | பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. |
|
754. | அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். |
|
755. | அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். |
|
756. | உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். |
|
757. | அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. |
|
758. | குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை. |
|
759. | செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில். |
|
760. | ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. |
|
Last modified: Wednesday, 16 February 2022, 3:33 AM