67. வினைத்திட்பம்
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைத்திட்பம்.
661. | வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. |
|
662. | ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். |
|
663. | கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்.. |
|
664. | சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். |
|
665. | வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும். |
|
666. | எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். |
|
667. | உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. |
|
668. | கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல். |
|
669. | துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை. |
|
670. | எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. |
|
අවසන් වරට නවීකරණය කරන ලද: බදාදා, 2 පෙබරවාරි 2022, 5:02 පෙ.ව.