Flag of Sri Lanka National Emblem of Sri Lanka

Sri Lankan Largest MOOC platform for General Education

e-தக்சலாவ

Laptop

தரம் 1 தொடக்கம் 13 வரை சகல பாடங்களின் பாடத்திட்டம், ஆசிரியர் வழிகாட்டி, பாடப்புத்தகங்கள், கற்றல் மென்பொருட்கள், கடந்தகால வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள், க.பொ.த சாதாரண,உயர்தர வினாத்தாள்கள், வினாவங்கிகள் போன்றன் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்ச்சியாக விருத்திசெய்யப்படுவதுடன் சர்வதேச தரத்திற்கு ஒப்பான e-கற்றல் முகாமைத் தொகுதி எமது தேசத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட விடயங்களை அடைவதற்கான இலங்கையின் அணுகுமுறையே e-தக்சலாவ

கல்வி அமைச்சசின் தொலைக்கல்வி மேம்பாட்டுக் கிளை எதிர்கால எதிர்பார்ப்பு e-தக்சலாவை விரிவாக்குவதுடன் ஒன்லைன் மூலமான வினாக்கள், மாணவர்கள், ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்தல் அணி ஒன்றை நிறுவுதல். பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வளங்களை வழங்குதல். விசேட தேவையுடைய மாணவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் நிர்மாணித்தல். ஆசிரியர் மாணவர்களிடத்தே அறிவு. கருத்துக்களை பகிர்ந்து கொள்ளக் கூடியவாறு விருத்தி செய்தலாகும்.

e-தக்சலாவ யாரினால்

இச் செயற்திட்டம் இலங்கை கல்வி அமைச்சசின் தொலைக்கல்வி மேம்பாட்டுக் கிளைனால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச் செயற்திட்டத்தில் திறமை, திறன், மிக்க அரச பாடசாலை ஆசிரியர்களினால் கல்வியமைச்சின் கல்விப் பணிப்பாளர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுவதுடன் கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் ரூபவாஹனி கூட்டுத்தாபனத்தின் பங்களிப்புடன்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

e-தக்சலாவ யாருக்காக

இந்த கற்றல் முகாமைத்துவ தொகுதியானது அறிவனைப் பெற்றுக்கொள்ளும் நோக்கோடு வரும் அனைவரும் e-தக்சலாவில் நன்மையினைப் பெற்றுக்கொள்ள முடியும் அத்துடன் கல்வியமைச்சினால் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என்பதுடன் இது முற்றிலும் இலவசமானது. மற்றும் இவ் இணையதளம் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் வரவேற்பதுடன் இக் கருத்துக்கள் மேலும் e-தக்சலாவை விருத்தி செய்வதற்கும் தரமுயர்த்துவதற்கும் உதவும்.

e-தக்சலாவ இலங்கையின் பொது கல்வி அமைப்பின் உத்தியோக பூர்வ கற்றல் முகாமைத்துவ தொகுதியாகும்
Working with Ave
Working with Ave
தூரநோக்கு

e-கற்றல் ஊடாக தேசத்தை வலுப்படுத்தல்

பணிக்கூற்று

பிரபஞ்சத்திற்கான தன்னம்பிக்கையுள்ள மனிதனை உருவாக்குவதற்கான கற்றல் சந்தர்ப்பங்களை உருவாக்குதல்.