97. மானம்
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். மானம்.
961. | இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். |
|
962. | சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். |
|
963. | பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. |
|
964. | தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. |
|
965. | குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். |
|
966. | புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. |
|
967. | ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. |
|
968. | மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை கபீடழிய வந்த இடத்து. |
|
969. | மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். |
|
970. | இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. |
|
<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>> |
අවසන් වරට නවීකරණය කරන ලද: බදාදා, 16 පෙබරවාරි 2022, 3:39 පෙ.ව.