82. தீ நட்பு
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: தீ நட்பு.
811. | பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. |
|
812. | உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என். |
|
813. | உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். |
|
814. | அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. |
|
815. | செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. |
|
816. | பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். |
|
817. | நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும். |
|
818. | ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். |
|
819. | கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. |
|
820. | எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. |
|
Last modified: Wednesday, 16 February 2022, 3:35 AM