92. வரைவின்மகளிர்
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். வரைவின்மகளிர்.
911. | அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். |
|
912. | பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். |
|
913. | பழகிய பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதல் பிணந்தழீஇ அற்று. |
|
914. | பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர். |
|
915. | பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். |
|
916. | தந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். |
|
917. | நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள். |
|
918. | ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு. |
|
919. | வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. |
|
920. | இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. |
|
<<<<<<<<<>>>>>>>> |
අවසන් වරට නවීකරණය කරන ලද: බදාදා, 16 පෙබරවාරි 2022, 3:38 පෙ.ව.