8. அன்புடைமை
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.
71. | அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். |
|
72. | அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. |
|
73. | அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. |
|
74. | அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு. |
|
75. | அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. |
|
76. | அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. |
|
77. | என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். |
|
78. | அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. |
|
79. | புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. |
|
80. | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 6:33 AM