2. வான்சிறப்பு
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு.
11. | வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. |
|
12. | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. |
|
13. | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. |
|
14. | ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். |
|
15. | கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. |
|
16. | விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. |
|
17. | நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். |
|
18. | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. |
|
19. | தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். |
|
20. | நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. |
|
Last modified: Tuesday, 15 November 2022, 11:16 AM