73. அவையஞ்சாமை
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: அவையஞ்சாமை.
721. | வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். |
|
722. | கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். |
|
723. | பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர். |
|
724. | கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். |
|
725. | ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு. |
|
726. | வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. |
|
727. | பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். |
|
728. | பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். |
|
729. | கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார். |
|
730. | உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். |
|
Last modified: Wednesday, 16 February 2022, 3:31 AM