70. மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுதல்.
691. | அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். |
|
692. | மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும். |
|
693. | போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. |
|
694. | செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து. |
|
695. | எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. |
|
696. | குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். |
|
697. | வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். |
|
698. | இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். |
|
699. | கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். |
|
700. | பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். |
|
Last modified: Wednesday, 16 February 2022, 3:30 AM