60. ஊக்கம் உடைமை
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: ஊக்கமுடைமை.
591. | உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. |
|
592. | உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். |
|
593. | ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். |
|
594. | ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை. |
|
595. | வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. |
|
596. | உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. |
|
597. | சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு. |
|
598. | உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு. |
|
599. | பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். |
|
600. | உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு. |
|
இறுதியாக மாற்றியது: புதன், 2 பிப்ரவரி 2022, 5:01 காலை