19. புறங்கூறாமை

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்:புறங்கூறாமை.

181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.
185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை
புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்.
186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
மாண்டற் கரிதாம் பயன்.
188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம்
புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.
190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
Last modified: Wednesday, 2 February 2022, 3:14 AM