111. புணர்ச்சிமகிழ்தல்

குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:களவியல். அதிகாரம்: புணர்ச்சிமகிழ்தல் .

1101 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
1102 பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
1103 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
1104 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
1105 வேட் ட பொழுதின் அவையவை
போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள்.
1106 உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
1107 தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
1108 வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
1109 ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
1110 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
අවසන් වරට නවීකරණය කරන ලද: අඟහරුවාදා, 1 පෙබරවාරි 2022, 6:01 පෙ.ව.